பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செட்டிகுளம் வடகரையில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த வீரய்யா மகன் செந்தில்குமார் (வயது 35), புதுக்கோட்டை காமராஜர் புரத்தை சேர்ந்த செல்லக்கண்ணு மகன் சரவணன் (38), சேகர் (50), ஆலங்குடி கணேஷ் மகன் மகேஸ்வரன் (38), ஆலங்குடி அருகே பள்ளத்தி விடுதியை சேர்ந்த ஸ்ரீரங்கம் மகன் பாண்டியன் (35) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 54 சீட்டுக்கட்டுகள், ரூ.54,200-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.