கொடுமுடி அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது செய்யப்பட்டனா்
கொடுமுடி அருகே தாமரைபாளையம் பகுதியில் கொடுமுடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர்கள் கொடுமுடியை சேர்ந்த சிவராஜ் (வயது 45), பாலசுப்பிரமணியம் (56), சிவகிரியை சேர்ந்த மகேஷ் குமார் (35), மோகன்ராஜ் (38), ஜவகர் (32) உள்பட 10 பேர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 10 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட ரூ.5 ஆயிரத்து 400-யும் பறிமுதல் செய்தனர்.