ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை-பணம் திருட்டு

ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை-பணம் திருட்டு போனது.

Update: 2022-10-20 21:26 GMT

துறையூர்,

கதவு திறந்து கிடந்தது

திருச்சி மாவட்டம், துறையூர் மதுராபுரி புதுத்தெரு பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன். இவர் திருச்சி சாலையில் மிக்சி சர்வீஸ் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பிருந்தா. இவர் துறையூைர அடுத்துள்ள நரசிங்கபுரம் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை பிருந்தாவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தியாகராஜன் கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

நகை-பணம் திருட்டு

இதையடுத்து தியாகராஜன் வீட்டிற்குள் பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், ரூ.18 ஆயிரத்து 500 திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தியாகராஜன் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட துறையூர் போலீசார், இந்த திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்