மின்பாதிப்புகளை சரிசெய்ய 10 குழுக்கள் அமைப்பு

கோடை மழையின் காரணமாக ஏற்படும் மின்பாதிப்புகளை சரி செய்ய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரி தெரிவித்தார்.

Update: 2023-05-25 19:00 GMT

10 குழுக்கள் நியமனம்

தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் பொதுமக்கள் நலன் கருதி, மின்தடை மற்றும் மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கோடை மழையை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக தேவையான தளவாட சாமான்கள் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பருவமழை காரணமாக எதிர்பாராத நிகழ்வுகளாக மின்தடை ஏற்பட்டாலோ, மரங்கள் மின்பாதையில் விழுந்து கிடந்தாலோ, மின்கம்பி அறுந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது போன்றவை நிகழ்ந்தால் மின் நுகர்வோர்கள் உடனடியாக தொடர்பு கொண்டு சரிசெய்வதற்காக தேனி மின்பகிர்மான வட்டத்தில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் மொத்தம் 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் கொடுக்கலாம்

எனவே, கோடை மழை காரணமாக ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து மின்வாரியத்துக்கு பொதுமக்கள் உடனுக்குடன் தகவல் தெரிவித்தால் உடனடியாக அங்கு இந்த குழுவினர் வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள். மேலும், தேனி மின்பகிர்மான வட்ட அளவில் இந்த பணிகளுக்கான சிறப்பு அலுவல் அதிகாரியாக செயற்பொறியாளர் சண்முகா நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடமும் 9443384886 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை கொடுக்கலாம்.

மேலும் பொதுமக்கள் 9498794987 என்ற செல்போன் எண் மற்றும் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தங்களது தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்