தெருநாய்கள் கடித்து 10 ஆடுகள் படுகாயம்

சங்கரன்கோவிலில் தெருநாய்கள் கடித்து 10 ஆடுகள் படுகாயம் அடைந்தன.

Update: 2023-05-06 19:15 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்கு புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் சங்கரன்கோவில் நகர் பகுதிக்குட்பட்ட இடத்தில் ஆட்டு கொட்டகை அமைத்து 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆட்டு கொட்டகைக்குள் புகுந்த தெருநாய்கள், அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறின.

இதில் சுமார் 10 ஆடுகள் பலத்த காயமடைந்தன. 20 ஆடுகள் லேசான காயத்துடன் தப்பின. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தெருநாய்களை விரட்டினர். காயமடைந்த ஆடுகளை வருவாய் துறையினர் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்