தடுப்புச்சுவரில் வேன் மோதி 10 பக்தர்கள் காயம்

திருமங்கலம் அருகே பக்தர்கள் சென்ற வேன் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த 10 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-06-02 19:32 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் அருகே பக்தர்கள் சென்ற வேன் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த 10 பேர் காயம் அடைந்தனர்.

தடுப்பு சுவரில் மோதிய வேன்

சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 65). இவருடைய மனைவி வளர்மதி (60).

திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வாசுதேவன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து வேனில் புறப்பட்டார். நேற்று அதிகாலை 4.45 மணி அளவில் அந்த வேன், மதுரை மாவட்டம் திருமங்கலம் மேலக்கோட்டை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நான்கு வழிச்சாலை தடுப்பு சுவரில் மோதியது.

10 பேர் காயம்

இந்த விபத்தில் வளர்மதி, ராஜ்குமார், ஷாலினி, விஜயகுமார், சரோஜாதேவி, குழந்தைகள் காதம்பரி, நித்திலன் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த வளர்மதி உள்ளிட்ட 7 பேர் மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்து காரணமாக நான்குவழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்