10-ந்தேதி மின் நிறுத்தம்

பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம் பகுதிகளில் 10-ந்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-08-07 19:54 GMT

கும்பகோணம்:

சாக்கோட்டை துணைமின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கும்பகோணம், உமா மகேஸ்வர புரம், கோசி மணி நகர், தாராசுரம், எலுமிச்சங்காய் பாளையம்,அண்ணல் அக்ரஹாரம், திப்பபிராஜபுரம், அரியத்திடல்,சிவபுரம் உடையாளூர்,சுந்தர பெருமாள் கோவில், நாச்சியார் கோவில், திருநாகேஸ்வரம், முருக்கங்குடி, அய்யாவாடி,புதூர்,அவனியாபுரம்,திருநீலக்குடி,பட்டீஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் நகர உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்