சாலையில் சுற்றித்திரிந்த 10 மாடுகள் பிடிபட்டது
வேலூரில் சாலையில் சுற்றித்திரிந்த 10 மாடுகள் பிடிபட்டது. அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து வேலூர் 50-வது வார்டுக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகர், அண்ணா நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த 10 மாடுகளை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பிரபாகரன் அபராதம் விதித்தார். அப்போது மாநகராட்சி கவுன்சிலர் அருணா விஜயகுமார் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.