10 மூட்டை போதை பொருட்கள் பறிமுதல்மளிகை கடை உரிமையாளர் கைது

வேலூரில் மளிகைக்கடையில் 10 மூட்டைகள் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-12 19:36 GMT

வேலூர்

வேலூரில் மளிகைக்கடையில் 10 மூட்டைகள் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் கஸ்பா வசந்தபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்டவை பெட்டி, மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெற்கு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் போலீசார் நேற்று வசந்தபுரம் பகுதியில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு மளிகை கடையில் 10 மூட்டைகளில் போதை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து கடையின் உரிமையாளர் கஸ்பா பழைய பஜார் தெருவை சேர்ந்த அன்சரை (வயது 45) கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என்றும், போதை பொருட்களை யாரிடம் இருந்து வாங்கினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்