பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-20 19:55 GMT

விராலிமலை ஒன்றியம் மண்டையூர் ஊராட்சிக்குட்பட்ட பிடாம்பட்டி எல்லையம்மன் கோவில் அருகே அப்பகுதியை சேர்ந்த சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்பேரில் மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது அங்குள்ள எல்லையம்மன் கோவில் அருகே தனித்தனியே 2 இடங்களில் அமர்ந்து பணம் வைத்து சூதாடிகொண்டிருந்த 10 பேரை பிடித்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஓலையூர் குழந்தைராஜ் (வயது 31), ரமேஷ் (33), அந்தோணி (34), முள்ளிப்பட்டி முத்துகருப்பன் (40), பாலசுப்பிரமணியன் (34), முத்துசாமி (49), பிடாம்பட்டி ரமேஷ் (29), சக்தி (34), குண்டூர் தினேஷ்குமார் (30), குமாரமங்கலம் ரமேஷ் (30) என்று தெரியவந்தது. இதுகுறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் வைத்து சூதாடிய 10 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்