வாளி தண்ணீரில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலி

ஊட்டியில் வாளி தண்ணீரில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2022-11-27 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் வாளி தண்ணீரில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

1½ வயது குழந்தை

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற சலீம் (வயது 32). ஊட்டி மார்க்கெட் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரிஜோத் பானு (28). இவர்களுக்கு 1½ வயதில் ரோஜா என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குழந்தை ரோஜா வீட்டு வராண்டாவில் விளையாடி கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை. இதனால் பதறி போன பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் குழந்தையை காணவில்லை. இதனால் யாரேனும் திருடி சென்று விட்டார்களோ என்ற அச்சத்தில் இருந்தனர்.

தண்ணீரில் மூழ்கி பலி

இதற்கிடையில் வீட்டின் குளியல் அறை கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது குழந்தை ரோஜா வாளி தண்ணீரில் தலைகீழாக கிடப்பது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து தூக்கினர். அப்போது தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் கதறி அழுதனர்.

இதை அறிந்ததும் ஊட்டி மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது விளையாட சென்ற போது வாளி தண்ணீரில் தவறி விழுந்து குழந்ைத இறந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சோகம்

பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வாளி தண்ணீரில் குழந்தை மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சம்பவம் குறித்து ஊட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்