ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று கொத்தூர் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஆந்திர மாநிலம் பதிவு எண் கொண்ட மினிவேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சிறு,சிறு மூட்டைகளில் சுமார் 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து டிரைவரை பிடித்து விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம் குப்பம் செட்டிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சேகர் (வயது 22) என்பதும், திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு கடத்தியதாக தெரிவித்தார்.