காரில் கடத்தி வரப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காரில் கடத்தி வரப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பொதுவினியோக திட்ட ரேஷன் அரிசி மற்றும் மண்எண்ணெய் போன்றவை அடிக்கடி கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன்படி திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில், தஞ்சாவூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில், புதுகோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கடையக்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை நடத்தினர். சோதனையில், காரில் ேரஷன் அரிசி கடத்தி வந்தது புதுகோட்டை மாவட்டம், மேல்நிலைபட்டியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 53), புதுகோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த முகமது கனி (54) என்பவது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, 1,600 கிலோ ரேஷன் அரிசி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.