பெண்ணிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு

Update: 2022-09-24 23:07 GMT

தக்கலை:

தக்கலை அருகே உள்ள பெருஞ்சிலம்பு, பேயோட்டுவிளையை சேர்ந்தவர் முத்தையன். இவருடைய மனைவி ரோசா (வயது50), வேளிமலை ரப்பர் எஸ்டேட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலையில் வீட்டின் அருகில் உள்ள ஓமனாபுரம் ஓடையில் குளித்து விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென ரோசாவை கீழே தள்ளி அவரது கழுத்தில் அணிந்திருந்த 2¼ பவுன் சங்கலியை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட ரோசா சங்கலியை இறுக பிடித்துக் கொண்டு திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். இந்த போராட்டத்தில் சங்கலி இரண்டாக அறுந்து ¾ பவுன் ரோசாவின் கையிலும், 1½ பவுன் வாலிபரின் கையிலும் சிக்கியது. அதற்குள் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்களை கண்ட அந்த வாலிபர் கையில் கிடைத்த 1½ பவுன் சங்கிலியுடன் தப்பிச் சென்றார். மேலும், வாலிபர் தள்ளியதில் ரோசாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்தசம்பவம் குறித்து ரோசா கொற்றிக்கோடு போலீசில் புகார் செய்தார் அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்