இ-சேவை மையத்தில் ரூ.1½ லட்சம் திருட்டு

தேவதானப்பட்டி அருகே இ-சேவை மையத்தில் ரூ.1½ லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2023-02-03 19:00 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 28). இவர் மேல்மங்கலத்தில் பஸ்நிலையம் அருகே இ-சேவை மையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இ-சேவை மையத்தை பூட்டி விட்டு முத்துப்பாண்டி வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் திறக்க வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இ-சேவை மையத்தின் உள்ளே சென்று பார்த்தபோது பண பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்