ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் ரூ.1¾ லட்சம் திருட்டு

குடியாதத்தில் ஆட்டோவில் சென்ற பெண்ணின் கவநத்தை திசை திருப்பி ரூ.1¾ லட்சத்தை திருடிசென்ற 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-07-27 16:04 GMT

குடியாதத்தில் ஆட்டோவில் சென்ற பெண்ணின் கவநத்தை திசை திருப்பி ரூ.1¾ லட்சத்தை திருடிசென்ற 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆட்டோவில் சென்றார்

குடியாத்தத்தை அடுத்த ராஜாக்கல் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி ராஜகுமாரி, பூ வியாபாரம் செய்து வருகிறார். ராஜகுமாரி தனது மகளுடன் நகை உள்ளிட்ட பொருட்கள் வாங்க பணத்துடன் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதிக்கு வந்துள்ளார். அங்கிருந்து ஆட்டோவில் ஏறி உறவினர்களை பார்க்க மகளுடன் லிங்குன்றம் கிராமத்திற்கு சென்றார்.

வழியில் இரண்டு பெண்கள் அந்த ஆட்டோவில் ஏறி உள்ளனர். நெல்லூர்பேட்டையில் உள்ள மாசுபாடு அம்மன் கோவில் அருகே ஆட்டோ சென்ற போது ராஜகுமாரியின் மகள் ஆட்டோவில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்று உள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்த இரண்டு பெண்கள் ராஜகுமாரியுடன் பேச்சு கொடுத்துள்ளனர். அவர்கள் கீழ சில்லறை காசுகள் கிடப்பதாக கூறியுள்ளனர்.

ரூ.1¾ லட்சம் திருட்டு

அதை ராஜகுமாரி எடுக்க முயன்ற போது இரண்டு பெண்களும் ராஜகுமாரி பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை திருடி உள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்தில் ஆட்டோவில் இருந்து இறங்கி இரண்டு பெண்களும் சென்று விட்டனர். பின்னர் மகளுடன் ஆட்டோவில் சென்ற ராஜகுமாரி லிங்குன்றம் கிராமம் அருகே சென்ற போது பையில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை காணவில்லை.

இரண்டு பெண்களும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகுமாரி உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்