1½ கிலோ கஞ்சா பறிமுதல்

மூலைக்கரைப்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-10-28 21:03 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சேவகன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் உதயகுமார் (வயது 25), டிரைவர். தற்போது மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து டிரைவர் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டுக்கு பிற ஊர்களைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் வந்து போவது குறித்து அப்பகுதியினர் மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார், தனிப்பிரிவு ஏட்டு முருகன் உள்பட போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டில் 1½ கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை போலீசார் கைப்பற்றினார்கள். வீட்டில் இருந்து உதயகுமார் கஞ்சா விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்