1 மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை
திருமக்கோட்டையில் 1 மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை அருகே உள்ள வல்லூர், கோவிந்தநத்தம், தச்சன் வயல், ராதாநரசிம்ம புரம், ராஜகோபால புரம், தென்பரை, பாளையக்கோட்டை, மேலநத்தம், கன்னியாகுறிச்சி, எளவனூர் ஆகிய கிராமங்களில் காலையில் இருந்து வெயில் சுட்டெரித்தது.
திடீரென மதியம் 3 மணி அளவில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று பெய்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.