கருங்கல்லால் ஆன 1½ அடி முருகன் சிலை

வேதாரண்யம் கடற்கரையில் கருங்கல்லால் ஆன 1½ அடி உயரமுள்ள முருகன் சிலை கரை ஒதுங்கி கிடந்தது. அந்த சிலையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-09-14 18:14 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் கடற்கரையில் கருங்கல்லால் ஆன 1½ அடி உயரமுள்ள முருகன் சிலை கரை ஒதுங்கி கிடந்தது. அந்த சிலையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கரை ஒதுங்கிய முருகன் சிலை

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு, வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில் முருகன் சிலை ஒன்று நேற்று காலை கரை ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்த வடக்குசல்லிக்குளத்தை சேர்ந்த வினோத்குமார்(வயது38) என்பவர் வேட்டைக்காரனிருப்பு கிராம உதவியாளர் ரவிக்கு தகவல் ெகாடுத்தார்.தகவல் அறிந்ததும் அவர் சம்பவ இடத்திற்கு வந்து கரை ஒதுங்கிய முருகன் சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

கடலில் வீசி சென்றார்களா?

விசாரணையில் அந்த சிலை சுமார் 1½ அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆனது என்பது தெரியவந்தது. பின்னர் அந்த சிலையை அவர் வேட்டைக்காரனிருப்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றார்.இதுகுறித்து ரவி, வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு தகவல் ெதரிவித்தார். அதன் பேரில் யாராவது இந்த சிலையை கடலில் வீசி சென்றார்களா? என ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.பின்னர் இந்த சிலை நாகை அருங்காட்சியத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்