1-ந்தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்

1-ந்தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-10-28 19:26 GMT

நவம்பர் மாதம் 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினம் கொண்டாட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்று கிராமசபை கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந்் தேதி பகல் 11 மணிக்கு தவறாமல் கிராமசபை கூட்டப்பட வேண்டும்.

கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழக்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கிராம சபைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

கிராம சபை கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாகவும், கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்