287 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவி

மதுக்கரையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 287 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சமீரன் வழங்கினார்.

Update: 2022-11-10 18:45 GMT

மதுக்கரை

மதுக்கரையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 287 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சமீரன் வழங்கினார்.

பட்டுநூல் உற்பத்தி

கோவை மதுக்கரை அருகே திருமலையம்பாளையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள்தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கலெக்டர் சமீரன், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் 287 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

மதுக்கரை வட்டாரத்தில் 100 ஏக்கருக்கு மேல் பட்டுப்புழு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு மல்பெரி செடிகள் மற்றும் பட்டுப்புழு வளர்வதற்கு உகந்த சூழ்நிலை நிலவுகிறது.

எனவே மதுக்கரையில் பட்டுநூல் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குழந்தை திருமணம்

இதற்கு முன்பு மாவுத்தம்பதியில் நடைபெற்ற முகாமில், குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுக்க கிராமம் மக்கள் அனைவ ரும் உறுதி ஏற்றனர்.

அது போல் இங்கும் அனைவரும் குழந்தை திருமணத்தை தடுக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தை திருமணம் தொடர்பான புகார்களை உடனடியாக மாவட்ட சமூக நல அலுவலரிடம் தெரிவிக்கலாம். குழந்தை திரு மணத்தை தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு கிராமத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்தான் இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும் இந்த முகாமில் வழங் கப்பட்ட மனுக்கள் மீது உரிய காலத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

முகாமில் அரசுத்துறைகள் சார்பில் செயல்படுத் தப்படும் நலத்திட்டங்களை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்