222 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்

ஆம்பூர் அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் 222 பயனாளிகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2022-11-09 18:22 GMT

ஆம்பூர் அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் 222 பயனாளிகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் 222 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து மின்னூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 76 வீடுகள் கட்டுமான பணிகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒரு வாரத்திற்குள்

அப்போது இன்னும் ஒரு வாரத்திற்குள் அடித்தளம் அமைக்கப்பட வேண்டும் எனவும் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

மாதனூர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீல், உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்