1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அரசு முதன்மை செயலாளர், கலெக்டர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2022-09-24 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை

அரசு முதன்மை செயலாளர், கலெக்டர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முதன்மை செயலாளர்

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி யூனியன் களிமண்குண்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை இணைந்து பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில், தமிழக அரசின் முதன்மைச்செயலரும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ் களிமண்குண்டு கடற்கரை பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும் போது,கடற்கரை பகுதியில் மரங்கள் வளர்ப்பதால் கடல் அரிப்புகளை தடுத்து, இயற்கை சீற்றங்களில் இருந்து கிராம பகுதிகளை பாதுகாக்க முடியும். போதிய அளவு மழை கிடைக்க அதிக மரங்கள் வளர்ப்பது முக்கியம். நட்ட மரக்கன்றுகளை ஒவ்வொருவரும் வளர்த்து பெரிய மரமாக மாற்ற சபதம் எடுத்து செயல்பட வேண்டும் என்றார்.

1 கோடி மரக்கன்றுகள்

களிமண்குண்டு ஊராட்சியில், ஆஞ்சநேயர்புரம் கடற்கரை முதல் தோப்புவலசை கடற்கரை வரை 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாவட்டத்தில் மற்ற கடற்கரைப் பகுதிகளில் வனத்துறை மூலம் 2.50 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன. அதேபோல் பிற துறைகள் மூலமாக 97.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மேற்கொண்டு மாவட்டத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் பசுமை தமிழகமாக காடுகள் நிறைந்த பகுதியாக வனப்பரப்பை அதிகரித்திடும் வகையில் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

உறுதிமொழி

இதை தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் நம்ம ஊரு சூப்பரு தூய்மை திட்ட பணிகள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில் பொதுமக்களுடன் அரசு செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் நம்ம ஊரு சூப்பரு தூய்மைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஸ் சுதாகர், தோட்டக்கலை துணை இயக்குனர் நாகராஜன், திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, ஊராட்சி தலைவர்கள் வண்ணாங்குண்டு தியாகராஜன், திருப்புல்லாணி கஜேந்திரமாலா, தாதனேந்தல் கோகிலா ராஜேந்திரன், களிமண்குண்டு வள்ளி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்