பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1¼ கோடி ஊக்கத் தொகை
சோளிங்கரில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1¼ கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
சோளிங்கர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் 3,725 பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1 கோடியே 33 லட்சத்து 39 ஆயிரத்து 324 வழங்கும் நிகழ்ச்சி இந்தியன் வங்கி அலுவலகத்தில் நடந்தது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அசோகன், நகர செயலாளர் கோபி, காங்கிரஸ் நகர தலைவர் கோபால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க துணை தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மேலாளர் பழனி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம் கலந்து கொண்டு 3,725 பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒரு கோடியே 33 லட்சத்து 39 ஆயிரத்து 324 ரூபாய்க்கான காசோலையை இந்தியன் வங்கி மண்டல மேலாளர் முருகேசன், சோளிங்கர் வங்கி கிளை மேலாளர் சந்தோஷ் குமார் திருப்பாதி, துணை மேலாளர் ரமேஷ் ஆகியோரிடம் வழங்கினார். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், வெங்குப்பட்டு தி.மு.க. கிளை செயலாளர் குமார் உடனிருந்தனர்.