மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்
மணல் கடத்திய மாட்டுவண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆரணி
மணல் கடத்திய மாட்டுவண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
களம்பூரை அடுத்த கூடலூர் கோணவட்டம் பகுதி அருகே நேற்று முன்தினம் இரவு களம்பூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது சதுப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்தார். போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை நடுரோட்டிலேயே விட்டுவிட்டு அவர் தப்பி ஓடினார். இதனையடுத்து மாட்டுவண்டியை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை தேடி வருகின்றனர்.