பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆற்காடு
பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆற்காடு அடுத்த ஆயிலம் கிராமத்தில் நேரடி நெல் முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கட்டணம் வசூலிப்பதாக கூறி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆயிலம் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆற்காடு மேற்கு ஒன்றிய தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சிவமூர்த்தி, ஒன்றிய துணை தலைவர் ஆறுமுகம், ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட பொதுச்செயலாளர் பாலமுருகன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணை தலைவர் அரி, பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.