மு.க.ஸ்டாலினுக்கு நாளை பிறந்தநாள் - தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நாளை காலை 8 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) தனது 71-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நாளை காலை 8 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர் 8.30 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெறுகிறார்.