வடமதுரை அருகே சூதாடிய 7 பேர் கைது

Arrested

Update: 2022-11-15 16:54 GMT

வடமதுரை அருகே உள்ள மோளப்பாடியூர் பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த ரேஷன் கடை அருகே 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

விசாரணை நடத்தியதில் அவர்கள், மோளப்பாடியூரைச் சேர்ந்த கருப்பணன் (வயது 35), கருப்பையா (50), வேலுச்சாமி (52), பாலமுருகன் (45), கதிர்வேல் (24), சத்தியானந்தம் (40), கணேசன் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்