வாரச்சந்தைக்கு ரூ.38 லட்சத்தில் புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளன

At Rs.38 lakh for the weekly market New shops have been built

Update: 2022-11-15 17:33 GMT

தணிகைபோளூர் ஊராட்சியில் வாரச்சந்தைக்கு ரூ.38 லட்சத்தில் புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளன என்று ஊராட்சி மன்ற தலைவர் அ.வெங்கடேசன் கூறினார்.

அடிப்படை தேவைகள்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் தணிகைபோளூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் தணிகைபோளூர், அல்லியப்பன்தாங்கல், வாணியம்பேட்டை, மேல்கண்டிகை, முசல்நாயுடுகண்டிகை, பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட 26 குக்கிராமங்கள் உள்ளன.

தணிகைபோளூர் காலனி பகுதியை சேர்ந்த அ.வெங்கடேசன் ஊராட்சி தலைவராக உள்ளார். அவர் கூறியதாவது:-

நான் பொறுப்பேற்று ஒரு வருடத்தில் தணிகைபோளூர், புதியகாலனியில் ரூ.4½ லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை, தணிகைபோளூரில் பல ஆண்டுகளாக சாலையோரம் நடந்து வந்த வாரச்சந்தைக்கு ரூ.38 லட்சம் மதிப்பில் 28 புதிய கடைகள், தணிகைபோளூர், அருந்ததிபாளையம் கிராமத்தில் மழைநீர் செல்லவும், சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் மழைநீர் செல்ல தலா ரூ.2 லட்சம் மதிப்பில் 2 சிறுபாலம், வாணியம்பேட்டை, வாணியத்தெருவில் ரூ.5½ லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், மேட்டு காலனியில் ரூ.3 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை, தணிகைபோளூர், ராஜவீதியில் ரூ.1 லட்சம் மதிப்பில் சிறுபாலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் ரூ.50 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டு உள்ளது.

தார் சாலை

தற்போது வாணியம்பேட்டை காலனி, சாரதா சவுத்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தலா ரூ.3 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, தணிகைபோளூர், பழைய காலனி பகுதியில் ரூ.6½ லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், மேட்டுக்காலனி, பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் தலா ரூ.3½ லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை, பிரியா நகர் பகுதியில் ரூ.7 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை, அல்லியப்பன்தாங்கல் கிராமம், சுடுகாட்டிற்கு செல்ல ரூ.4 லட்சத்தில் தார் சாலை உள்பட ரூ.40 லட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தணிகைபோளூர் பெரிய ஏரியில் இருந்து சித்தேரிக்கு செல்லும் கால்வாயில் மழைநீர் செல்லும் போது பழையகாலனி, புதிய காலனி பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து கொள்ளும். இதுகுறித்து தகவல் அறிந்த நான் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பொதுப்பணித்துறை மூலமாக பொக்லைன் எந்திரத்தை கொண்டு கால்வாயின் கரையை பலப்படுத்தினேன். தற்போது மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் செல்லாமல் சித்தேரிக்கு தங்கு, தடையின்றி செல்கிறது.

தணிகைபோளூர் பழைய காலனி பகுதியில் 30 வருடமாக கழிவுநீர் செல்ல கால்வாய் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். நான் எடுத்த சீரிய முயற்சியால் தற்போது ரூ.6½ லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து தீர்வு ஏற்படுத்தி கொடுத்து உள்ேளன்.

ஊராட்சியில் 31 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் மூலம் குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இருளர் குடியிருப்பு, நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 45 குடும்பத்திற்கு புதிய ரேஷன் அட்டை வாங்கி கொடுத்து உள்ளேன். தணிகைபோளூர் ஊராட்சி, எம்.ஆர்.எப்.தனியார் டயர் தொழிற்சாலையுடன் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

மின்விளக்கு இல்லாத பகுதியில் புதிய மின் விளக்குகளையும், பழுதடைந்து காணப்பட்ட மின்விளக்குகளை உடனுக்குடன் சரிசெய்து கொடுத்து உள்ேளன். இதுவரை 400-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் மாற்றப்பட்டு உள்ளது. மக்களுக்கு குடிநீர் தங்கு தடையில்லாமல் கிடைக்க ஆழ்துளை கிணறுகளில் பழுதடைந்து காணப்பட்ட மின்மோட்டார்களை சரிசெய்தும், கூடுதல் ஆழ்துளை கிணறுகள் அமைத்து காலை, மாலை என 2 வேளை குடிநீர் கிடைக்கும் வகையில் செய்து கொடுத்து உள்ளேன்.

மேட்டு காலனி, அல்லியப்பன்தாங்கல், வாணியம்பேட்டை பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டிகளை அகற்றி விட்டு புதிய குடிநீர் தொட்டி கட்ட கோரிக்கை வைத்து உள்ேளன்.

முதன்மை ஊராட்சியாக...

மேலும் நான் தினமும் காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்பேன். மக்களுக்கு அடிப்படை வசதிகள் தங்கு, தடையில்லாமல் கிடைக்கும் வகையில் பணிகளை செய்து வருகிறேன். குறைகளை மக்கள் கூறுவதற்கு முன்பாக முடிந்தவரை நான் முன்னதாக செய்து கொடுத்து விட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறேன். பொதுமக்கள் தங்கள் பகுதி குறைகளை எப்போது வேண்டுமானாலும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து என்னிடம் தெரிவிக்கலாம். கோரிக்கைகள் மீது உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தி தருவேன்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தணிகைபோளூர் ஊராட்சியை முதன்மை ஊராட்சியாக மாற்ற ஒன்றியக்குழு தலைவர் நிர்மலாசவுந்தர், துணைத்தலைவர் வீரா என்ற புருஷோத்தமன், மாவட்ட கவுன்சிலர் அம்பிகாபாபு, ஒன்றிய கவுன்சிலர் தாரகேஸ்வரிமூர்த்தி ஆகியோரின் ஒத்துழைப்போடு தணிகைபோளூர் ஊராட்சி மன்ற துணைதலைவர் ஜீவாகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் இளவரசன், புவனேஸ்வரி, தீணு, பரந்தாமன், கீதா, ஏழுமலை, அமுலு, தமயந்தி ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு மாற்றுவேன்.

தணிகைபோளூர் ஊராட்சியில் மகப்பேறு, பொது மருத்துவம், அவசர சிகிச்சைக்காக 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரக்கோணம் அல்லது மூதூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் தணிகைபோளூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருளர் குடியிருப்பில் 100 வருடங்களாக புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் 60 குடும்பங்களுக்கு அரசு மாற்று இடம் வழங்கி குடியிருப்புகள் கட்டி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அ.வெங்கடேசன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்