உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

கூடலூரில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்தியதாக உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ere arrested

Update: 2022-11-15 19:00 GMT

கூடலூர்,

கூடலூரில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்தியதாக உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திடீர் சோதனை

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூரில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசிலா தலைமையிலான போலீசார் திடீரென சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி சில பெண்கள் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களை பிடித்து போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது மசாஜ் சென்டருக்குள் தங்கி இருந்து விபசாரத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர், ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் தீவிர விசாரணை நடத்திய போது மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

3 பேர் கைது

இதைத்தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் ஷகினா ( வயது 46), கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஷிபின் (24), வழிக்கடவை சேர்ந்த குஞ்சு முகமது (36) ஆகிய 3 பேர் மீது கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து 3 பேரை கைது செய்து, கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ரகசிய தகவலின் பேரில் மசாஜ் சென்டரில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நடத்திய விசாரணையில் விபசாரம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கூடலூர் நகரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்