போச்சம்பள்ளி அருகே சூதாடிய 3 பேர் கைது

Update: 2022-11-05 18:45 GMT

மத்தூர்:

போச்சம்பள்ளி போலீசார் பட்டகப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பட்டகப்பட்டியை சேர்ந்த கணபதி (வயது 38), ஸ்டாலின் (38), சம்பத் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்