ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு-மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-16 18:45 GMT

குன்னூர்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நீலகிரியில் 2 நாள் சுற்றுலா பயணமாக வந்து ஊட்டி, கோத்தகிரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இந்த நிலையில் நேற்று மதியம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நடந்த தொழிற்சங்க கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். பின்னர் அவர், படுகர் இன மக்கள் வசிக்கும் ஜெகதளா என்னும் கிராமத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு, படுகர் இன மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தார். இதைதொடர்ந்து அவர் பேசியதாவது:- மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் நாடு வளர்ச்சியை கண்டுள்ளது. அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ெரயில்வே துறையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக நீலகிரி மலை ெரயிலில் புதிதாக நவீன பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களை மேம்படுத்த தலா ரூ.10 கோடி வீதம் மொத்தம் ரூ.20 கோடி நீதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்