சிக்கல்:
கீழ்வேளூர் அருகே ஒர்குடி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒர்குடி வெட்டாறு பாலம் அருகில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், சிக்கல் ஊராட்சி பொன்வெளி நடுத்தெருவை சேர்ந்த காளிமுத்து மகன் காளிதாஸ் (வயது 24), சங்கமங்கலம் அருகே பழையனூர் மேல்பாதியை சேர்ந்த ராஜா மகன் ராஜ்மோகன் (19) என்பதும், இவர்கள் காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாஸ், ராஜ்மோகன் ஆகிய 2 பேரையும் ைகது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் பொரவச்சேரி ஊராட்சி குற்றம் பொருத்தானிருப்பு மாரியம்மன் கோவில் தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தனபாலன் (59) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.