கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பாம்புகள் பிடிபட்டது

2 snakes caught in collector office premises

Update: 2022-11-15 16:21 GMT

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தும் பகுதியில் பாம்பு சத்தம் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு பாம்பு பார்க்கிங் பகுதியை நோக்கி வந்தது. இதனைப் பார்த்து அங்கிருந்த அலுவலர்கள் ஓட்டம் பிடித்தனர். இது குறித்து உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) திருமுருகன், தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி 2 கண்ணாடி விரியன் பாம்புகளை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் அமர்குஷ்வாஹா அங்கு வந்து தீயணைப்பு வீரர்கள் பாம்பை போராடி பிடித்ததை பார்வையிட்டார். பிடிபட்ட இரண்டு பாம்புகளும் அருகில் உள்ள காப்புக் காட்டில் கொண்டுவிடப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்