பரதேவதை கோவில் திருவிழா

ஸ்ரீமதுரையில் பரதேவதை கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-06-03 20:00 GMT

கூடலூர்

கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சி கொரவயல் பகுதியில் பரதேவதை கோவில் உள்ளது. இக்கோவிலில் மவுண்டாடன் செட்டி மற்றும் ஆதிவாசி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலர் அருள்வாக்கு கூறினர். தொடர்ந்து அம்மனுக்கு தேங்காய் உடைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேங்காய் உடைத்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்