குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டை சேதப்படுத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-17 18:45 GMT

மணல்மேடு:

மணல்மேடு அடுத்த கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் ராஜ்மோகன். இவர் அப்பகுதியில் நீண்ட நாட்களாக கஞ்சா மற்றும் சாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தி, மணல்மேடு போலீசில் பலமுறை புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் சமூக விரோதிகள் சிலர் கடந்த 14-ந் தேதி ராஜ்மோகன் வீட்டை சேதப்படுத்தி, அவரது தாயாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராமமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடலங்குடி கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காருகுடி கிராமத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். ராஜவர்மன் வரவேற்றார். ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் தலைவர் சிங்கார செல்வமணி, விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்