தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-03-11 18:45 GMT

மேட்டுப்பாளையம், 

மேட்டுப்பாளையம் அருகே ஊமப்பாளையம் கீழ் தெருவை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (வயது 32), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வெள்ளிங்கிரி தினமும் மது குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்து உள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கவுசல்யா கோபித்துக் கொண்டு, தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வெள்ளிங்கிரி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்