சொக்கனூரில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி முகாம்

சொக்கனூரில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி முகாம்

Update: 2022-12-03 18:45 GMT

கிணத்துக்கடவு

கால்நடைகளுக்கு ஏற்படும் அம்மை நோயை தடுக்க கால்நடைத்துறை சார்பில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட சொக்கனூர் ஊராட்சி பகுதியில் சட்டக்கல்புதூர், பாலார்பதி ஆகிய பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு என்ற திருநாவுக்கரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு மாடுகளுக்கு அம்மை தடுப்பூசிகளை செலுத்தினார். முகாமில் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி சிவராஜ், கால்நடை மருத்துவ உதவியாளர் முத்துசாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்