மொடக்குறிச்சியில் துணை சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. கோரிக்கை மனு

பிஜேபி

Update: 2022-11-15 22:02 GMT


மொடக்குறிச்சியில் துணை சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.

கோரிக்கை மனு

சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-

அறச்சலூர் அருகே வடுகப்பட்டியில் 10 ஏக்கர் நிலத்தில் மஞ்சள் பயிருக்கு சிறப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசூர் கிளாம்பாடியில் புதிய கேந்திர வித்யாலயா பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும். அனுமன் நதி ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்வதற்கு மதிப்பீட்டு தொகை ஒதுக்க வேண்டும்.

துணை சார்பதிவாளர் அலுவலகம்

வரலாற்று சிறப்பு மிக்க பழைய கட்டிடம் உள்ள கொடுமுடி பயணியர் மாளிகையை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து உள்ளது. அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும். மொடக்குறிச்சியில் துணை சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.

அரசு பள்ளிக்கூடங்களில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கும், பழைய வகுப்பறைகளில் பழுது நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியில் இருந்து பாசூர், எழுமாத்தூர் வழியாக பெருந்துறை செல்லும் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும். மொடக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்