வீட்டுக்குள் புகுந்த மரநாய் பிடிபட்டது
The woodchuck that entered the house was caught
தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளம் அருகே உள்ள வெள்ளையந்தோப்பை சேர்ந்தவர் செல்வேந்திரன், கயிறு வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய வீட்டிற்குள் நேற்று அதிகாலையில் திடீரென பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த செல்வந்திரன் அங்கு பார்த்தபோது, மரநாய் ஒன்று அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தது. அவரை கண்டதும் அது அங்கு ஒழிந்து கொண்டது. இதுபற்றி அவர் வனத்துறையினருக்கு தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் மரநாயை லாவகமாக பிடித்தனர். பின்னர், அதனை அடர்ந்த காட்டு பகுதிக்குள் கொண்டு விட்டனர்.