வாடிப்பட்டி,
சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை( வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதனால் வாடிப்பட்டி புறவழிச்சாலை, பழனி ஆண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், தாதம்பட்டி ஜவுளி பூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கள்ளர் மடம், வல்லப கணபதி நகர், மகாராணி நகர், ஆர்.வி. நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிபட்டி செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன் கோட்டம், சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சோழவந்தான் மோகன் பிளாட், ரிஷபம், திருமால் நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிபட்டி பங்களா ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.