தொழில் அதிபர் வீட்டில் திருட முயற்சி

ஏர்வாடியில் தொழில் அதிபர் வீட்டில் திருட முயற்சி நடந்தது.

Update: 2022-11-15 19:12 GMT

ஏர்வாடி:

நெல்லை மாவட்டம் ஏர்வாடி 6-ம் தெருவை சேர்ந்தவர் சேக் (வயது 60). தொழிலதிபர். இவருடைய வீட்டில் பட்டப்பகலில் 15 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் திருடும் நோக்கத்தில் பின்புறமுள்ள வீட்டு ஜன்னலை உடைக்க முயற்சி செய்துள்ளான். இந்த சத்தம் கேட்டு சேக் திடுக்கிட்டார். பின்னர் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தார். அப்போது சிறுவன் ஒருவன் வீட்டின் பின்புறம் ஜன்னலை உடைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்தார். உடனே அவர் வீட்டின் பின்புறம் சென்றார். ஆட்கள் வரும் சத்தம் கேட்ட அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். சிறுவன் ஜன்னலை உடைக்க முயற்சி செய்யும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.

இதேபோல் கடந்த 7-ந் தேதி திறந்திருந்த ஸ்டூடியோவில் புகுந்த சிறுவன் உரிமையாளர் இல்லாத நேரத்தில் மணி பர்சில் இருந்து பணத்தை திருடி சென்றுள்ளான். இந்த காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அப்போது வெளியானது. இதுகுறித்தும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி திருடர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்