மன்னார்குடி;
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய திருவாரூர் மாவட்ட பா.ஜனதா நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டையில் நேற்று பா.ஜனதா சார்பில், பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆா்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்ட பா.ஜனதா பொருளாதார பிரிவு தலைவர் வக்கீல் செந்தமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.
கைது
அவர் பேசும்போது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, அண்ணாதுரை ஆகியோா் குறித்தும் அவதூறாக பேசியதாக பரவாக்கோட்டை தி.மு.க. கிளை செயலாளர் கதிரவன், பரவாக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.