திருமானூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

Power outage in Thirumanoor area the day after tomorrow

Update: 2022-11-15 18:45 GMT

அரியலூர் மாவட்டம், திருமானூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சாத்தமங்கலம் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர்அழுத்த மின் பாதையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான சாத்தமங்கலம், வெற்றியூர், விரகாலூர், கள்ளூர், கீழக்குளத்தூர், திருமானூர், சேனாபதி, முடிகொண்டான், வண்ணம்புத்தூர், கீழக்கவட்டான்குறிச்சி, கரைவெட்டிபரதூர், அண்ணிமங்கலம், அரண்மனைக்குறிச்சி, திருமழபாடி, கண்டிராதித்தம், புதுக்கோட்டை, இலந்தைக்கூடம், கோவிலூர், சின்னபட்டாக்காடு, ஏலாக்குறிச்சி, மாத்தூர், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர், வைப்பூர், மேலராமநல்லூர், கீழராமநல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்