சலூன் கடையில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
Man arrested for possession of ganja in saloon shop
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கீழமாளிகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகன்டன்(வயது 30). இவர் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் கடையை சோதனை செய்தனர். அப்போது கடையில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை இரும்புலிகுறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.