ரப்பர் தோட்டத்தில் புகுந்து பெண் தொழிலாளர்களை விரட்டிய யானை கூட்டம்

செங்கோட்டை அருகே ரப்பர் தோட்டத்தில் புகுந்து பெண் தொழிலாளர்களை யானை கூட்டம் விரட்டியது.

Update: 2022-11-15 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லை பகுதியில் 16 கிலோமீட்டர் தொலைவில் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது ஆரியங்காவு. இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்கு ஏராளமான ரப்பர் மரங்கள் உள்ளன. அந்த மரங்களில் ரப்பர் தயாரிக்க பால் எடுப்பதற்காக தினமும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரப்பர் தோட்டத்திற்கு பெண் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து யானை கூட்டம் ஒன்று தோட்டத்திற்குள் புகுந்தது. சுமார் 13 யானைகள் வேகமாக ரப்பர் தோட்டத்திற்குள் புகுந்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியபடி ஓடினார்கள். பின்னர் அங்கு புகுந்த யானைகள் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரப்பர் மரங்களை வேரோடு பிடுங்கி வீசியது. இந்த காட்சிகளை தொழிலாளர்கள் சிலர் மறைந்து நின்று செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்