பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
ஆவின் பால் விலை,மின்சார கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை உயர்த்தியதை கண்டித்து நாகை மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சந்தோஷ், நகர பொதுச்செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மீனவரணி மாநில செயலாளர் ஜீவானந்தம், மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் விஜிலா, நகர சிந்தனையாளர் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
செம்போடை
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ஊராட்சி கடைத்தெருவில் ஆவின்பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வேதாரண்யம் வடக்கு ஒன்றிய தலைவர் இளவேந்தன் முன்னிலை வகித்தார்.இதில் வடக்கு ஒன்றிய பார்வையாளர் இளந்தமிழன், பிரசார பிரிவு மாவட்ட தலைவர் கு.ப.இளம்பாரதி, பட்டியல் அணி மாவட்ட தலைவர் பரணி.செல்லத் துரை ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தேத்தாகுடி ஊராட்சி தலைவர் சரவணன் நன்றி கூறினார்.
திட்டச்சேரி
ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் திட்டச்சேரி கொந்தகை பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் அனந்தகிருஷ்ணன், விவசாய அணி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் மகாதேவன், விஜயராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர பொறுப்பாளர் சுதாகர் தலைமை தாங்கினார். இதில் நகர துணைத்தலைவர் லதா சிவகுமார், வர்த்தகப்பிரிவு மாவட்ட துணைத்தலைவர் நடராஜன், விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஐயப்பன் உள்பட பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.