முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு
Anti Bribery awareness for first year students
கலவை
கலவைஆதிபராசக்தி பொறியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா கல்லூரி முதல்வர் டி.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் கருணாநிதி முன்னிலை வகத்தார். பேராசிரியர் லோகேஷ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை கண்காணிப்பாளர் கணேசன் கலந்து ெகாண்டு லஞ்ச ஒழிப்பு வாரத்தின் ஒரு நிகழ்வாக மாணவர்கள் மத்தியில் லஞ்சம் மற்றும் ஊழல்களை தடுப்பதற்கான விதிமுறைகள் பற்றியும் மனதை ஒருமுகப்படுத்துவதும் மருத்துவத்தையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
முதல் நிலை காவலர் சூர்யா நாராயணன் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி கூறி மாணவர்களின் பொறுப்புணர்வுகளையும் எடுத்துரைத்தார்.
விழாவில் கல்லூரி துணை முதல்வர் பிரேம்குமார் பேராசிரியர் பிரபாதரன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். யோகபிரியா நன்றி கூறினார்