சாணார்பட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

LoveCouple

Update: 2022-11-15 17:14 GMT

சாணார்பட்டி அருகே உள்ள மந்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகமுத்து (வயது 22). இவர் காந்திகிராம கிராமிய பல்கலைகழகத்தில் படித்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் பழனி அருகே கீரனூரை சேர்ந்த காயத்ரி (20) என்பவரும் படித்து வருகிறார். இவர்கள் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்ததால் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. ஆனால் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, திருமலைக்கேணி உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் காதலர்கள் 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பபடி வாழலாம் என்று கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்