பால், மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
Baal, BJP condemned the hike in electricity charges. Demonstration
ராணிப்ேபட்ைட மாவட்டத்தில் பால், மின்கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
ராணிப்ேேட்ைை மாவட்டம் சோளிங்கரில் நகர பா.ஜ.க. சார்பில் தமிழகத்தில் பால் விலை, மின்கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. நகர பொதுச்செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் தேவராஜ் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ேபசினார்.
நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு பால் விலை, சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி சோனியா, பிரசார பிரிவு சீனிவாசன், வழக்கறிஞர் சீனிவாசன், வினோத், மணிமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர பொதுச்செயலாளர் கார்த்தி நன்றி கூறினார்.
அரக்கோணம்
அரக்கோணம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் தணிகைபோளூர் பஸ் நிறுத்தம் அருகே ஒன்றிய தலைவர் பார்த்தசாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் வழக்கீல் தனசேகரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
அரக்கோணம் நகர பா.ஜ.க. சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே நகர தலைவர் வெங்கடேசன் தலைமையிலும், தக்கோலத்தில் நகர தலைவர் ஜெகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ஆற்காடு
ஆற்காடு பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் தர்மராஜா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பிரகாஷ், பாலமுருகன், மனோகரன், சபாபதி, ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கல்வியாளர் பிரிவு செயலாளர் முத்துவேல், மாவட்ட செயலாளர் வரதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை நிகழ்த்தினர்.
இதில் நகர செயலாளர் பாஸ்கரன், முன்னாள் நகர தலைவர் நவீன் மற்றும் சுனில்குமார், மகளிர் அணி புவனேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வாலாஜா
வாலாஜா பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை அருகே வாலாஜா நகர பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாலாஜா நகர தலைவர் காந்தி மற்றும் மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்துகொண்டு பால் விலை உயர்வு மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.